உங்களுக்காக

வலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்

Latest Posts

மைதா! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்

கோதுமையில் உள்ள நார்ச்சத்துகளை அகற்றியே மைதா மாவு தயாரிக்கப்படுகிறது. இந்த மைதா மாவில் பல ஆபத்தான ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக, அலொக்ஸான் என்ற ரசாயனம் அதிகம் கலக்கப்படுகிறது. இதனால், இன்சுலின் சுரப்பது தடுக்கப்பட்டு ஏராளமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை

ஆரோக்கிய வாழ்வுக்கு சிறந்த உணவுகள்!

இன்றைய நவீன உலகில் மக்களை பல விதமான நோய்கள் ஆட்டிப் படைக்கின்றன. அதில் ரத்த அழுத்தம் முக்கியமானது. ரத்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. நாம் உண்ணும் உணவே நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று உணவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

கொழுப்பு மிக்க கல்லீரல் உயிர்க்கொல்லியா?

சமீப காலமாக மக்கள் மத்தியில் பரிச்சயமான மருத்துவ வார்த்தைகளில் ‘ஃபேட்டி லிவரு’ம் சேர்ந்துவிட்டது. முன்பெல்லாம் ‘40 வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமே வரக்கூடியதாக’ இருந்த இந்த நோய், இப்போது குழந்தைகளுக்கும் வருகிறது என்பதுதான் நம்மை உஷார்படுத்தி இருக்கிறது.

பாதம் வெடிப்பு நீங்க சில டிப்ஸ்..

பெண்களை பெரும்பாலும் பாதிக்கும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று இந்த பாத வெடிப்பு. உங்களின் முக அழகிற்கு நீங்கள் செலவிடும் நேரத்தில் கொஞ்ச நேரத்தை உங்களின் பாத வெடிப்பை போக்க செலவிட்டாலே போதும். இந்தப் பிரச்சனையிலிருந்து நீங்கள் சுலபமாக விடுபடலாம்.

உடல் உறுப்பை அகற்றுவது ஆபத்தா?

பித்தப்பை கல்பாதிப்பு உள்ள அனைவரும் கேட்கும் கேள்வி, ‘கல்லை மட்டும் அகற்ற முடியாதா? ஏன் பித்தப்பையை முற்றிலுமாக அகற்றுகிறீர்கள்?’ என்பதுதான். பித்தப்பை என்பது மிகவும் மென்மையான உறுப்பு. அதில், அறுவைசிகிச்சை செய்து கல்லை அகற்றி மீண்டும் தையல் போடுவது எல்லாம் முடியாத காரியம் என்று, அவர்களுக்கு விளக்கம் அளிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

ஊட்டச்சத்தை அதிகரிக்கும் உளுந்து!

வாழ்க்கைத்தேவைகளுக்காக, நாள் முழுவதும் ஓடிக்கொண்டிருப்போர் பலர். நேரத்துக்கு சாப்பாடு, நீராதாரம் எடுத்துக் கொள்ள வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஞாபகமே அவர்களில் பலருக்கு இருப்பதில்லை. தன்னையே பார்த்துக்கொள்ள கூட நினைவில்லாமல், வாழ்க்கையில் பயணிக்கும் காலம் தான் இது.

நேரத்துக்கு சாப்பிடுங்க அல்சரை விரட்டுங்க!

வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கவழக்கம், ஸ்ட்ரெஸ் என பல காரணங்களால் இன்று பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் பெப்டிக் அல்சர் எனப்படும் வயிற்றுப்புண் பிரச்னை இருக்கிறது.  உணவுக்குழாய், இரைப்பை, முன் சிறுகுடல் பகுதியில் ஏற்படும் புண்களையே அல்சர் என்கிறோம். அல்சர் பிரச்னை முற்றிய நிலையில் சிலருக்கு தொண்டையிலும், வாயிலும்கூட புண்கள்…
Read more

ரத்த அழுத்தம் போக்கும் கொத்தமல்லி!

மதிய உணவில், ரசம் சேர்த்துக் கொள்வது பலருக்கும் விருப்பமான ஒன்று. ரசத்தையும், உடல் ஆரோக்கியத்தை காக்கும் வகையில் தயார் செய்ய உதவுகிறது கொத்தமல்லி. ஆனால், உண்ணும்போது கொத்தமல்லியை தூர வைத்துவிட்டு, வெறும் ரசத்தை மட்டுமே குடிப்பதை, பலர் வழக்கமாக்கி கொண்டுள்ளனர். கொத்தமல்லியை சாப்பிடுவதால், உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, மருத்துவ ரீதியாக பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.

கண் இமைகள் அடர்த்தியாக வளர சில டிப்ஸ்..

பொதுவாக கண் இமை முடிகள் ஒரு நாளைக்கு சுமார் 0.15மிமீ வரை தான் வளருகின்றது. அவ்வாறு வளரும் முடிகள் சுமார் 5 முதல் 6 மாதங்களில் உதிர்ந்து விடுகின்றது.பின் உதிர்ந்த கண் இமை முடிகள் மீண்டும் முழுமையாக வளர 8 முதல் 10 வாரங்கள் எடுத்துக் கொள்கிறது.

தமிழ்நாடு அரசு… நிஜமாய் ஆள்வது யார்?

செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் ஆட்சி லகான், பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறது. ஜெயலலிதா இருந்தபோது போயஸ் கார்டனின் கதவுக்குப் பின்னால் இருந்து ஆட்சி செலுத்திய சசிகலா, ஜெயலலிதா இறந்த பிறகு, சிறைக் கதவுக்குப் பின்னால் இருந்து ஆட்சி நடத்துகிறார். தமிழ்நாட்டின் தலைவிதி, தமிழ்நாட்டுக்கு வெளியே இருக்கிறது.

குழந்தைக்கு கருவிலேயே பாடம்… நல்வழிப்படுத்த உதவும் தியான் பேபி தெரபி!

கருவில் இருக்கும்போதே குழந்தைக்கு நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுக்க முடியுமா? `நிச்சயம் முடியும்’ என அடித்துச் சொல்கிறார் மனநல மருத்துவர் கல்யாணி. அதற்கு வழிகாட்டுகிறது அவருடைய `தியான் பேபி தெரபி’ என்கிற பெற்றோருக்கான கல்வி! நம் இதிகாசத்திலும், புராணத்திலும் கேட்ட விஷயம்தான்.

மன மகிழ்ச்சி தரும் மணத்தக்காளி கீரை

மணத்தக்காளியின் கீரை, தண்டு, காய், பழம் என அனைத்தும் சிறந்த மருத்துவ குணம் உள்ள சத்துணவாகும். இந்திய மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது மணத்தக்காளி. இக்கீரை சத்துணவு பொருள்களைச் சரியாக வயிற்றுக்குள் அனுப்பிவிடுகிறது. நாம் சாப்பிட்ட உணவுப்பொருள்களை நன்கு செரிமானம் செய்கிறது. கழிவுப் பொருள்கள், சிறுநீர் முதலியவை வெளியேறவும், வழி அமைத்துக் கொடுக்கிறது. நோய்களைக்

மேடையில் ‘சின்னம்மா’ கட்… பேப்பரில் ‘அம்மா’ கட்..!

தினகரன் தனது அடுத்த நகர்வை ஆரம்பித்து விட்டார்” என்றபடி வந்து உட்கார்ந்தார் கழுகார்.‘‘அடுத்த நகர்வா?” என்றோம்!‘‘சசிகலாவையே ஒதுக்குவதுதான்” என்று அதிர்ச்சியைக் கொடுத்தார் கழுகார். ‘‘சசிகலாவை மொத்தமாகப் புறக்கணிக்கும் எண்ணத்துக்கு வந்துவிட்டார் தினகரன் என்பதையே அவரது நடவடிக்கைகள் காட்டுகின்றன. ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் தினகரனுக்காக தண்டையார்பேட்டையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மேடையில் ஜெயலலிதா, தினகரன் படங்கள்…
Read more